Saturday, April 28, 2012

உடம்பெல்லாம் எரியுதா? சீதாப்பழம் சாப்பிடுங்க

அவசர காலத்தில் எதையெல்லாமோ மறந்து போனோம். அதில் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களையும் தான். இயற்கையே மனிதனுக்கு சூட்சுமாக காட்டுவதை பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. ‘இப்போ நான் பழமா பழுத்துருக்கேன்.சாப்பிட்டு போனீங்கன்னா உங்க உடம்புக்கு நல்லது’ ன்கு எந்த பழமும் வாய் திறந்து சொல்ல முடியாது. வெயில் காலத்தில் நெல்லிக்காய் சந்தைக்கு வரும். அதை வாங்கி வாயில் பாட்டு சுவைத்தால் உடம்புக்கு குளிர்ச்சி. எவ்வளவு தூரம் நடந்தாலும் களைக்காது. நெல்லிக்காய் வற்றலை வாயில் போட்டு புட்பால் விளையாடினால்
ரொனால்டோவை கூட மிஞ்சி விடலாம். அது தான் ஒவ்வை கொடுத்த நெல்லிக்கனிக்கு சிறப்பு.சரி அதை பிறகு பார்க்கலாம்.
இப்போது சீத்தாப்பழ சீசன். சின்னப்பிள்ளைகள் கையில கெடச்சா அப்படியே ஒவ்வொரு விதையிலயும் ஒட்டியிருக்கிற வெண்மை நிற கரகரப்பான இனிப்போட இருக்கிற சதையை சீதாப்பழத்துல இருந்து எடுத்து சாப்பிடற விதமே அழகு. இந்த பழத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்.முடிந்தால் உங்கள் வீட்டில் ஒரு சீதாப்பழ மரத்தை நடுங்கள்.

No comments:

Post a Comment

Photobucket